சென்னையில் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்தால் அதனை பிடிக்க வனத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.
மழைக்காலங்களில் வனப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்புகள், ஆற்றுப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்புகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் வருவது வழக்கம்,
தற்போது சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாம்புகள் உள்ளிட்ட தொல்லைகள் இருந்தால் அதனை பிடிக்க 044-2220 0335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கிண்டி வனத்துறை அறிவித்துள்ளது.