தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் போதிய வியாபாரம் இல்லையென மதுரை வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கீழவாசல், விளக்குத்தூண், காமராஜர்சாலை, பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறிச்சோடி காணப்படுகின்றன. வானிலை மற்றும் ஆன்லைன் விற்பனையால் வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.