சென்னையில் ராயபுரம், அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை மிதமான மழை பெய்தது.
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 2 தினங்களுக்கு பின் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சென்னையில் கடந்த சில தினங்களாக இரவு மழை பெய்துவரும் நிலையில், இன்று அதிகாலை கோடம்பாக்கம், ராயபுரம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.