தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இந்நிலையில், தற்போது பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
மேலும், பரிசல் இயக்கவும், குளிக்கவும் 8வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.