தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக திருச்சியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் விடுமுறையையொட்டி, புத்தாடைகள் வாங்குவதற்காக என்எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு, மலைக்கோட்டை, பெரியகடை வீதி பகுதிகளில் உள்ள கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.