புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு சந்தையில் குவிந்த மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.
கடந்த ஒரு மாதமாக புரட்டாசியை ஒட்டி பெரும்பாலான இறைச்சி கடைகள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. தற்போது புரட்டாசி மாதம் முடிந்த நிலையில், முதல் ஞாயிற்றுக் கிழமையில் இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனர்.
அந்தவகையில், காசிமேடு சந்தையில் மீன்களை வாங்க மக்கள் அதிகளவில் வந்ததால் விலையும் அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ வஞ்சிரம் ஆயிரத்து 100 ரூபாய்க்கும், வவ்வால் மீன் ஆயிரம் ரூபாய்க்கும், கொடுவா 900 ரூபாய்க்கும், இறால் 400 ரூபாய்க்கும், நண்டு 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.