தூத்துக்குடி: சாயர்புரத்திலிருந்து செபத்தையாபுரம் வரை ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு நடைபெற்றது.
விஜயதசமி விழா மற்றும் லோக மாதா அகல்யாபாய் ஹோல்கரின் 300- வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் , அணிவகுப்பு நடைபெற்றது. சாயர்புரத்தில் மாலை 4 மணிக்கு ஸ்ரீ அதிர்ஷ்ட விநாயகர் ஆலயத்திலிருந்து அணிவகுப்பு தொடங்கியது.
அணிவகுப்பை மன்னார்குடி ஜீயர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ செண்டலங்கார செண்பகமண்ணார் இராமானுஜ ஜீயர் மலர் தூவி தொடங்கி வைத்தார். இதில் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்,அணிவகுப்பு சுமார் 2 கிமீ தூரம் சென்று சிவத்தையாபுரம் ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோவில் மைதானத்தில் நிறைவடைந்தது
தொடர்ந்து ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவா சங்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு செபத்தையாபுரம் இந்து நாடார் உறவின் முறை கர்த்தா பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ செண்ட அலங்கார செண்பக மண்ணார் ராமானுஜ ஜீயர் ஆசியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் பிராந்தப்சம்பர்க ப்ரமுக் Dr.S.R.ஸ்ரீ நிவாச கண்ணன் சிறப்புரையாற்றினார்.