தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் 8 அடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது.
ஆண்டிப்பட்டியில் இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது.இதனால் ஆண்டிப்பட்டி – ஏத்தகோவில் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை முழுவதுமாக மழைநீரில் மூழ்கியுள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.