வானிலை ஆய்வு மையம் அறிவித்ததுபோல் 2-வது நாளும் தொடர்ந்து மழை பெய்திருந்தால், சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது
நல்லவேளை சென்னை மக்கள் வருண பகவான் கிருபையால் தப்பித்தார்கள். வானிலை ஆராய்ச்சி தகவல்படி மேலும் ஒரு நாள் மழை பொழிந்திருந்தால் சென்னையே வெள்ளக்காடாகி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இது சென்னை மக்கள் செய்த புண்ணியம் தானே தவிர இதில் ஆட்சியாளர்கள் மார்தட்டிக் கொள்வதற்கு ஒன்றும் இல்லை. அதுதான் உண்மை என தெரிவித்தார்.
நேற்று இரவு பெய்த மழைக்கு வள்ளுவர் கோட்டம் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது என மக்கள் பேட்டி அளித்ததை தொலைக்காட்சியில் இன்று பார்த்தாகவும் அவர் கூறினார்.