குழந்தை தொடர்பான வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்பான் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்று மருத்துவர் அல்லாத ஒருவர் சிசுவின் தொப்புள் கொடியை அறுத்தது மருத்துவ சட்ட விதிகளை மீறிய செயல் என்று தெரிவித்தார்.
யூடியூபர் இர்பான் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், தனியார் மருத்துவமனை மருத்துவர் மீதும் புகார் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த விவகாரத்தில், வெளிநாட்டில் ஸ்கேன் செய்யப்பட்டதால் இர்பான் தப்பியதாகவும், தொப்புள் கொடி விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டாலும் சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.