ப்ரிக்ஸ் மாநாட்டிற்காக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அங்கம்வகிக்கும் ப்ரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இடையே தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு சற்று நேரத்தில் நடைபெறவுள்ள நிலையில், இரு நாடுகள் இடையே நிலவும் எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.