டானா புயல் எதிரொலியாக கொல்கத்தா, புவனேஸ்வர் விமான நிலையங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டானா புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை மேற்குவங்கம் – ஒடிசா இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம், மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்ப்படுகிறது.