தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து அக்டோபர் 28 முதல் 30 வரை, சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 900 சிறப்பு பேருந்துகள் சேர்ந்து மொத்தமாக 11 ஆயிரத்து 176 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரத்து 910 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 14 ஆயிரத்தது 86 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 பேருந்து நிலையங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்குமாறு போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.