திராவிட மாடல் ஆட்சியின் அவலத்தை விஜய் வெளிப்படுத்தியுள்ளதாக,, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழலுக்கு எதிராக விஜய் உறுதியாக இருப்பதை பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.
விஜய் திராவிட மாடல் ஆட்சியின் அவலத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், பாஜகவுக்கு எதிரான அவரது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“பெண்கள், முதியவர்கள், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான கட்சி பாஜக என்றும், தாம் உள்பட பல ஆளுநர்கள் நல்லதையே செய்துள்ளதாகவும் கூறினார். விஜய் தமது கொள்கை எதிரியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.