திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசால் அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
பூம்பாறை கிராமத்தில் இருந்து குண்டு பட்டி, பழம்புத்தூர் போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் முக்கிய சாலை பழுதடைந்து உள்ளதால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவதியடைந்துள்ள பொதுமக்கள் சாலையை சரி செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.