வங்கக் கடலில் உருவாகவுள்ள ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் முன்பே வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்நிலையில், சென்னையில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றிரவு புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலுக்கு “ஃபெங்கல்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இந்த புயலானது நாளை மறுதினம் வங்கக்கடலில் புயலாகவே நீடிக்கும் எனவும், 30-ஆம் தேதி சென்னைக்கு 30 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொள்ளும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் முன்பே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.