கூடலூர் அருகே, காபி தோட்டத்தில் உலா வந்த காட்டு யானையை கண்ட தொழிலாளர்கள் மரத்தின் மீது ஏறி உயிர் பிழைத்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காபி எஸ்டேட்டில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஏழுமுறம் காப்பி தோட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது உலா வந்த காட்டு யானை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
அப்போது சில தொழிலாளர்கள், மரங்களில் ஏறி கொண்டனர். சுமார் 15 நிமிடம் மரத்தின் அடியில் காத்திருந்த காட்டு யானை, பின்னர் அங்கிருந்து சென்றதால், தொழிலாளர்கள் உயிர் பிழைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.