சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய்ஷா பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐசிசி தலைவராக பதவி வகித்த கிரெக் பார்க்லே பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அந்த இடத்துக்கு ஜெய்ஷா தேர்வானார். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகனான அவர், ஏற்கெனவே பிசிசிஐ செயலராக திறம்பட செயல்பட்டார்.
ஐசிசி தலைவராக பொறுப்பேற்றது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெயஷா, மகளிர் கிரிக்கெட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், கிரிக்கெட்டை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்ல இருப்பதாகவும் உறுதியளித்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் மண்ணில் இந்தியா விளையாட மறுப்பு தெரிவிக்கும் நிலையில், இந்த பிரச்னைக்கு ஜெய்ஷா முன்னுரிமை கொடுத்து தீர்வு காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.