சிரியாவில் நடைபெற்று வரும் மோதலில் அமெரிக்கா தலையிடக்கூடாது என
புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிரியாவில் அதிபரை எதிர்க்கும் போராளிகள் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலில் பல நகரங்களை முழுவதுமாக கைப்பற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்யாவால் சிரியா மோதலை நிறுத்த இயலாது என்றும், சிரியாவில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் சிரியாவில் மோதல் நடைபெற வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.