இந்திய குடிமகனின் குரலாக அரசியலமைப்பு திகழ்வதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, மக்களவையில் அரசியலமைப்பு சட்டத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது உரையாற்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , ஒவ்வொரு இந்திய குடிமகனின் குரலாக அரசியலமைப்பு திகழ்வதாக தெரிவித்தார். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய அரசியலமைப்பு வழிகாட்டியாக உள்ளதாகவும் அவர் கூறிளார்.
அரசியலமைப்பை சொந்தமாக்கிக்கொள்ள ஒரு கட்சி முயல்வதாகவும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை பலமுறை அவமதித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.