கேரளாவின் 3 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சபரிமலையில் பக்தர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. மழை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கண்ணூர், காசர்கோடு தவிர பிற மாவட்டங்களுக்கு மஞ்கள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் பக்தர்கள் பாதுகாப்புடன் பயணிக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.