கும்பகோணம் அடுத்துள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில், கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், நவகிரகங்களில் ராகு பரிகார தலமாக விளங்கும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில், கடந்த 6-ம் தேதி கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தேரில், விநாயகர், சுப்ரமணியர், நாகநாதர், பிறையணியம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். 10-ம் நாள் நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளின் திருவீதியுலாவும், பின்னர் சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.