திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் சாமி தரிசனம் செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக், செவ்வாய்க்கிழமை இரவு ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு வந்தார்.
பின்னர் விஐபி பிரேக் தரிசனம் மூலமாக வீரேந்திர சேவாக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.