திமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, கேக் வெட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் மேடையில் பேசிய அவர், சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் அதிமுக என தெரிவித்தார். மேலும் திமுக அரசு சிறுபான்மை இன மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.