அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகாரளித்துள்ளார்.
இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள அண்ணாமலை, மாணவியின் அடையாளங்கள் காவல்துறை கசியவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, தமிழக போலீசார் வேண்டுமென்றே அலட்சியத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றத்தில் திமுகவினர் ஈடுபடுவது இது முதல்முறையல்ல என தெரிவித்துள்ள அண்ணாமலை, கைதான ஞானசேகரன் மீது 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்துள்ளார்.