அண்டார்டிகாவில் உள்ள வின்சன் சிகரத்தில் சிக்கிக்கொண்ட தமிழகத்தை சேர்ந்த மலையேற்ற வீராங்கனையை பாதுகாப்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
தமிழகத்தை சேர்ந்த மலையேற்ற வீராங்கனையான முத்தமிழ்செல்வி, அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய சிகரமான வின்சன் சிகரத்தில் ஏறினார். இதன்மூலம் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதனிடையே மோசமான வானிலை காரணமாக சிகரத்திலேயே சிக்கிக்கொண்ட அவர் தன்னை மீட்கக்கோரி வீடியோ வெளியிட்டார். இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு குழுவினர், விமானம் மூலம் முத்தமிழ்செல்வியையும் அவரது குழுவினரையும் பத்திரமாக மீட்டனர்.