புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி தேனி மாவட்டம், ஆனைமலையான் பட்டியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக மலைக் கோயிலை வந்தடைந்தனர்.
அதில் பலரும் பால் குடம், மயில் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். வார விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகரித்ததையடுத்து ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.