சீனாவில் தீவிரமாக பரவி வரும் HMPV வைரஸ் தொற்று, பெங்களூருவில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
HMPV வைரஸ் என்பது human metapneumovirus என்பதை சுருக்கம். HMPV வைரஸ் தொற்று சாதாரணமாக வரும் சளியில் தொடங்கி, அடுத்தடுத்து நுரையீரல் பாதிப்பு மற்றும் செயலிழப்பு வரை இந்த தொற்றின் வீரியம் இருக்கக் கூடும். சிறியவர் மற்றும் வயது முதிந்தோர் ஆகியோர் இதனால் வெகு தீவிரமாக பாதிக்கப்படுவர்.
இந்நிலையில் பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு HMPV தொற்று இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான வெளிநாட்டு பயண வரலாறும் இல்லாத சூழ்நிலையில் அக்குழந்தைக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரஸ் தொற்றால் யாரும் அச்சப்பட தேவையில்லை என கர்நாடக மாநில அரசு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.