கேரளாவில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர் ஒருவரை யானை சுழற்றி தூக்கி வீசிய காட்சி வைரலாகி வருகிறது.
மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதி பள்ளிவாசல் திருவிழாவில் 10 யானைகள் பங்கேற்றன. அதில் ஒரு யானை திடீரென மிரண்டு, அருகே நின்றிருந்தவரை தும்பிக்கையால் சுழற்றி தூக்கி வீசியது. இதனால் அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அலறி அடித்து ஓடினர்.
யானையால் தூக்கி வீசப்பட்ட நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யானை தாக்கியதாலும், கூட்ட நெரிசலாலும் மேலும் 21 பேர் காயமடைந்தனர்.