வரும் 10ம் தேதி பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்ட வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதில் டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.