தவெக தலைவர் விஜய் கூறுவதை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்பதில்லை என அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.
தவெக நிர்வாகி ஒருவரிடம், அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் தவெக தலைவர் விஜய்யின் இடத்திற்கு வர, பொதுச்செயலாளர் ஆனந்த் ஆசைப்படுவதாகவும், எல்லா செயல்களிலும் ஆனந்த் தன்னையே முன்னிலைப்படுத்தி செயல்படுவதாகவும் ஜான் ஆரோக்கியசாமி கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் சமயத்தில் தவெக 2 சதவீத வாக்குகளை கூட பெறாது என ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.