திருச்செந்தூர் நீதிமன்றத்தில் முதன் முதலாக சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு முதன் முதலாக சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது. நீதிபதி செல்வபாண்டி முன்னிலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நீதிபதிகள் வரதராஜன், முத்துலட்சுமி, மற்றும் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நீதிமன்றம் வாயில் முன் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து கயிறு இழுத்தல் , நாற்காலி பிடித்தல், சிலம்பம் போட்டி, பானை உடைத்தல் உள்ளிட்ட பாரம்பரியமிக்க பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் பரிசுகளை வழங்கினர்.