தேசிய அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தமிழக வீரர் யோகேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் கடந்த 5-ம் தேதி தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அணி சார்பில், விருதுநகர் மாவட்டம் ஆத்திபட்டியைச் சேர்ந்த யோகேஸ்வரன் பங்கேற்றார்.
அவர், 90 கிலோ சப் – ஜூனியர் பிரிவில் 195 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என்று கூறியுள்ள அவர், இதற்கு தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.