விழுப்புரம் அருகே, இருவேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் ஆயிரம் கிலோ குட்கா கடத்திய 3 பேரை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் ஓலக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலைகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது, கார்களில் மூட்டை மூட்டையாக இருந்த ஆயிரம் கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, வடமாநில இளைஞர் உட்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயிரம் கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.