சென்னை பள்ளிகளுக்கு அம்மா உணவகங்களில் காலை உணவு தொடர்ந்து தயாரிக்க வேண்டும் - தனியாருக்கு வழங்க அண்ணாமலை எதிர்ப்பு!
Aug 17, 2026, 12:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை பள்ளிகளுக்கு அம்மா உணவகங்களில் காலை உணவு தொடர்ந்து தயாரிக்க வேண்டும் – தனியாருக்கு வழங்க அண்ணாமலை எதிர்ப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 28, 2025, 07:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை கைவிடவேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “சென்னையில் உள்ள சுமார் 350க்கும் அதிகமான பள்ளிகளில், சுமார் 65,000க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு, அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு, நிலையான வருமானம் கிடைக்கப்பெற்று வந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றபோது, மாமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், அந்த முடிவைக் கைவிட்டனர். தற்போது, மீண்டும் தனியாருக்குத் தாரைவார்க்க, ஒப்பந்தம் கோரி இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்தது திமுக அரசு. அப்படி மேம்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரைவார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்?

கண்துடைப்புக்காகத் திட்டங்கள் அறிவிப்பது அல்லது தங்கள் லாப நோக்கங்களுக்காகத் திட்டங்களை மடைமாற்றுவது என, நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தொடர்ந்து அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை கைவிடவேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadu BJP State President Annamalaiamma unavagamAmma canteensmorning food in amma canteens
Share
Tweet
SendShare
Previous Post

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Next Post

கேரளாவுக்கு 8 டன் சின்ன வெங்காயம் அனுப்பிவைப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!

Related News

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

போதைப்பொருள் புழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது – சட்டசபையில் காரசார விவாதம்!

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies