அமெரிக்காவுக்கு ரஷ்ய எண்ணெய் : ஏற்றுமதி மூலம் ரூ. 6,850 கோடி லாபம் சம்பாதித்த ரிலையன்ஸ்!
Sep 20, 2026, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்காவுக்கு ரஷ்ய எண்ணெய் : ஏற்றுமதி மூலம் ரூ. 6,850 கோடி லாபம் சம்பாதித்த ரிலையன்ஸ்!

Murugesan M by Murugesan M
Mar 20, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம், சுமார் 6,850 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது சாத்தியமானது  எப்படி? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

2022ம் ஆண்டு,தொடக்கத்தில், ரஷ்யா-உக்ரைன்  போர் தொடங்கியது.  சர்வதேச சட்டங்களை மீறியதாகச் சொல்லி, ரஷ்யாவுக்கு எதிராக,உக்ரைனுக்கு  அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

மேலும் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதி உதவிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்தன.  ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப் பட்டன.

எனினும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதையோ,பயன்படுத்துவதையோ அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை செய்யவில்லை. மேலும்,ரஷ்யக் கச்சா எண்ணெய்யிலிருந்து பெறப்படும், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளை ஏற்றுமதி செய்வதற்கும் ,இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்படவில்லை.

இந்த பொருளாதாரத்  தடையால், ரஷ்யா தன் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை, பிற நாடுகளுக்குக் குறைந்த விலைக்கு விற்க முன்வந்தது. அதனால், இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது. பின்னர் அவற்றைச் சுத்திகரித்துப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

இந்தியா, கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்காமலிருந்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய் 200 டாலரைத் தாண்டி இருக்கும். இதனால், உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கும். இந்தியாவின் இந்த முடிவால்தான் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் தடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில்தான், கடந்த டிசம்பர் மாதம், ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. ரஷ்ய அரசுக்குச் சொந்தமான Rosneft நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒருநாளைக்கு 5 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியா- ரஷ்யாவுக்கு இடையேயான இதுவரை இல்லாத மிகப்பெரிய எரிசக்தி ஒப்பந்தமாகும்.

ஆண்டுதோறும் 1.1 லட்சம் கோடி ரூபாய்  மதிப்பிலான இந்த ஒப்பந்தம், பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவுக்கு நிலையான வருவாயை வழங்குகிறது. அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ரஷ்ய கச்சா  எண்ணெய்யைச் சுத்திகரிப்பு செய்து அதன் மூலம் பெறும் எரிபொருளை இறக்குமதி செய்து வருகிறது.

Nayara Energy நிறுவனம், ஆண்டுக்கு 20 மில்லியன் டன் சுத்திகரிப்பு ஆலையைக் குஜராத்தின் Vadinar பகுதியில்,வைத்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 1740 கோடி ரூபாய் மதிப்புள்ள எரிபொருளை இந்நிறுவனம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் 1173 கோடி மதிப்பிலான ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது.

மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து, 397 கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. இதில்,208 கோடி ரூபாய் மதிப்பிலான ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கூடுதலாகத் துருக்கியின் மூன்று சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து மொத்தம் 5,828 கோடி மதிப்பிலான எரிபொருள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5,155 கோடி மதிப்பிலான ரஷ்ய கச்சா எண்ணெய்யில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு,இந்தியா மற்றும் துருக்கியில் உள்ள ஆறு சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சுமார்  26,489 கோடி ரூபாய் மதிப்பிலான சுத்திகரிக்கப் பட்ட எண்ணெய்யை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.  இதில் 12,298 கோடி ரூபாய் மதிப்பிலான ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டதாக எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA ) அறிக்கை தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸிடமிருந்து  எரிபொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. அமெரிக்காவுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்ததன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் சுமார்  6,850 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக  ஐரோப்பியச் சிந்தனைக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

Tags: Russian oil to America: Reliance earned a profit of Rs. 6850 crore through exports!அமெரிக்காவுக்கு ரஷ்ய எண்ணெய்ரிலையன்ஸ் நிறுவனம்
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மாநகராட்சி நடவடிக்கை : 30 ஆண்டுகளுக்கு பின் சீரமைக்கப்படும் பந்தல்குடி கால்வாய் பாலம்!

Next Post

அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : எச். ராஜா வலியுறுத்தல்!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies