இண்டி கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையிலான ஊழல் குழு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, சுதந்திர இயக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை ஊழல் நிறைந்த அமைப்பாகக் காங்கிரஸ் மாற்றியது என விமர்சித்துள்ளார்.
இந்த வழக்கில் அவதூறு பரப்பியதற்காகக் காங்கிரஸ் கட்சியும் காந்தி குடும்பமும் வெட்கித் தலைகுனிய வேண்டும் எனப் பதிவிட்டுள்ள அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியுடன் நாடு முழுவதும் உள்ள ஊழல் கட்சிகள் கைகோர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழலில் தலைசிறந்த கட்சி காங்கிரஸ் எனக் குற்றம் சாட்டியுள்ள அண்ணாமலை, இண்டி கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையிலான ஊழல் குழு என விமர்சித்துள்ளார்.