தேனியில் உள்ள கௌ மாரியம்மன் கோயிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் கதவை இழுத்து மூடியதால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கௌ மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சித்திரைத் திருவிழா மே 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கோயிலில் கொடிக்கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்க, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கோயிலுக்கு வருகை தந்தனர். அப்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார், இருபுறங்களிலும் உள்ள கதவுகளை மூடினர். போலீசாரின் இந்த செயலால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.