திருமண வாழ்வை சிதைத்த தீவிரவாதம்!
Oct 2, 2026, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

திருமண வாழ்வை சிதைத்த தீவிரவாதம்!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 08:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வலின் உடலைக் கண்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறித் துடித்தது தேசத்தையே உலுக்கியுள்ளது.

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரியின் உடலைக் கண்டு மனைவி கதறிய காட்சிகள் தான் இவை.

தேனிலவுக்காக வினய் நர்வலுடன் காஷ்மீர் செல்லும் போது அவரது மனைவி, ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார் தனது கணவரை இழக்கப் போகிறோம் என்று….

பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி மதியம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வினய் உட்பட 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். தனது கணவரைக் காப்பாற்ற வேண்டும் என அபயக் குரல் எழுப்பிய அவரது மனைவிக்கு அந்தச் சூழலில் இறைவனின் கருணை கிடைக்கவில்லை.

உதவி கேட்டு ஓய்ந்து போன அவர், கணவரின் மூச்சு அடங்கி விட்டதை அறிந்து அவரது உடலுக்கு அருகிலேயே  உறைந்து போய் அமர்ந்து விட்டார். திருமணமான ஒரே வாரத்தில் கணவனை இழந்து பரிதவித்த அவர், கணவரின் சலமனற்ற முகத்தையே வேதனை தோய்ந்த கண்களால் பார்த்துக் கொண்டே இருந்தார். அவரது இந்தப் புகைப்படம் தான் ஒட்டுமொத்த தேசத்தையும் வேதனையால் உலுக்கி இருக்கிறது.

ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த வினய் நர்வல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் கடற்படையில் அதிகாரியாகச் சேர்ந்தார். கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி ஹிமான்ஷியை கரம் பிடித்த அவர், தேனிலவு கொண்டாட சுவிட்சர்லாந்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், விசா கிடைக்காத காரணத்தால் மனைவியுடன் காஷ்மீருக்கு சென்றார்.

பயங்கரவாத தாக்குதலில் சிக்கும் முன்பாக மனைவியுடன் உற்சாகமாக ஆடிப் பாடி, வினய் நர்வல் எடுத்துக் கொண்ட வீடியோவும் தற்போது வெளியாகி இருக்கிறது. மனதில் ஆயிரம் கனவுகளுடன் புது வாழ்வில் அடியெடுத்து வைத்த இந்த ஜோடியின் வாழ்க்கையை, ஒரு நொடியில் சிதறடித்திருக்கிறது பயங்கரவாதிகளின் வன்முறை வெறியாட்டம்…. இறுதி ஊர்வலத்தில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உறவினர்கள் புடைசூழ வினய் நர்வலின் உடல், எடுத்துச் செல்லப்பட்டது.

முன்னதாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா, கடற்படை தலைமை தளபதி தினேஷ் கே திரிபாதி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்து படுபாதக செயலை செய்து, வினய் நர்வல் உட்பட 26 பேரை கொடூரமாக கொன்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நிச்சயம் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்.

எதிர்காலத்தில் தீவிரவாதிகளை அனுப்புவதைப் பற்றி நினைக்கக்கூட முடியாத அளவிற்கு பாகிஸ்தானிற்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்று ஆதங்கத்துடன் கூறுகின்றனர் வினய் நர்வலின் உறவுகளும், சொந்தங்களும்…

Tags: காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்Kashmir Pahalgam attackTerrorism that destroyed married lifeஇந்திய கடற்படை அதிகாரியான வினய் நர்வால்
Share
Tweet
SendShare
Previous Post

காஷ்மீர் கொடூரம் பின்னணி என்ன?

Next Post

பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் – அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

Related News

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

Load More

அண்மைச் செய்திகள்

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies