முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் - அண்ணாமலை அழைப்பு!
Sep 12, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் – அண்ணாமலை அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 11, 2025, 12:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் வரும் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உட்பட முருகப் பெருமான் ஆலயங்களை சீரமைக்க வலியுறுத்தியும், நமது பண்பாட்டையும், ஹிந்து தர்மத்தையும் காத்திடவும், நமது கோவில்களை மீட்டிடவும், உலகெங்கிலும் உள்ள, குறிப்பாக தமிழகத்தில் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைத்து, மதுரையில் ‘குன்றம் காக்க, கோயிலை காக்க’ என்ற பெயரில், முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து முன்னணி சார்பில்  மாநிலத் தலைவர்,  காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில், வரும் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திமுக உள்ளிட்ட கட்சிகள் போலி மதச்சார்பின்மை பேசி, ஹிந்து மதத்தைச் சார்ந்த மக்களையும், பக்தர்களையும், கோவில்களையும், தொடர்ந்து பாரபட்சமாக நடத்தி வருவதோடு, கோவில் சொத்துக்களை, கோவில்களுக்கும், பக்தர்களுக்கும் வேண்டிய அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை எதிர்த்து, பக்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமது ஆலயங்கள், முறையாகப் பராமரிக்கப்படுவதோடு, பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கோவில்களில் இருந்து கிடைக்கும் வருமானம், கோவில்களின் மேம்பாட்டிற்கும், பராமரிப்பிற்கும் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, முருக பக்தர்கள் மாநாட்டினை முன்னெடுத்திருக்கும் ஹிந்து முன்னணி இயக்கத்திற்கு பாராட்டுக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் அனைவரும், வரும் ஜூன் 22 அன்று, மதுரையில் பெருவாரியாகக் கூடி, முருக பக்தர்கள் மாநாட்டினை, மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

Tags: Kadeshwara SubramaniamHindu devotees' conferenceMaduraibjpannamalaihindu munani
Share
Tweet
SendShare
Previous Post

ஆனைமலை சந்தையில் காய்கறி விற்பனை செய்த மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டும் திமுக நிர்வாகி!

Next Post

போச்சம்பள்ளி அருகே தனியார் பள்ளி பேருந்தின் உள்ளே பட்டாசுகள் வீசப்பட்ட சம்பவம் – விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies