ஜூலை 7 முதல் பொறியியல் கலந்தாய்வு!
Sep 21, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜூலை 7 முதல் பொறியியல் கலந்தாய்வு!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 04:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்டு 26ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொறியியல் கலந்தாய்வுக்கு மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகக் கூறினார்.

அதில், 2 லட்சத்து 50 ஆயிரத்து 298 பேர் பதிவுக்கட்டணம் செலுத்தி உள்ளதாகவும், 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 மாணவர்களுக்குத் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 47 ஆயிரத்து 372 மாணவர்களுக்குத் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சகஸ்ரா என்ற மாணவி முதலிடத்தை பிடித்தாகவும், நாமக்கலைச் சேர்ந்த கார்த்திகா 2வது இடமும், அரியலூரைச் சேர்ந்த அமலன் ஆண்டோ என்ற மாணவர் 3ஆம் இடம் பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் கடலூரைச் சேர்ந்த தரணி என்ற மாணவி முதலிடம் பிடித்தாகவும், சென்னையைச் சேர்ந்த மைதிலிக்கு 2வது இடமும், கடலூரைச் சேர்ந்த முரளிதரன் என்ற மாணவருக்கு 3வது இடமும் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதிவரை நடைபெறும் என்றும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7, 8ஆம் தேதிகளில் நடைபெறும் எனவும் கூறினார்.

பொது பிரிவினருக்கான சிறப்பு இடஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 9 முதல் 11ஆம் தேதிவரை நடைபெறும் என்றும், பொது கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதிவரை நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.

துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23ஆம் தேதி வரையும், கலந்தாய்வு முழுவதும் இணையதளம் வாயிலாக நடைபெறும் எனவும் அவர் கூறினார். மேலும், கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட கட்டண முறை, நடப்பாண்டும் தொடரும் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.

Tags: Engineering counseling from July 7thபொறியியல் கலந்தாய்வு
Share
Tweet
SendShare
Previous Post

திருவண்ணாமலை : கிணற்றில் மிதந்த தாய், குழந்தையின் சடலம் மீட்பு!

Next Post

இஸ்ரேல் பிரதமர் குறித்த ஜோஹ்ரான் மம்தானி வீடியோ வைரல்!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies