ஆ.ராசாவை கண்டித்து ஜுலை 1ல் பாஜக ஆர்பாட்டம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
Apr 29, 2026, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆ.ராசாவை கண்டித்து ஜுலை 1ல் பாஜக ஆர்பாட்டம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 29, 2025, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்து பேசிய திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பாஜக சார்பில் ஜூலை முதல் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ரூ. 1,76,000 கோடி ஊழல் வழக்கில் சிக்கி திகார் ஜெயிலில் இருந்த ஆ.ராசா அரசியல் நாகரீகம் அற்ற முறையில்  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

தற்போதும் அவருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதையும் மக்கள் அறிவார்கள்.அருவருப்பான முறையில் பொது வெளியில் பேசுவதை ஆ ராசா வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் ஆக செயல்பட்டவர் தரம் தாழ்ந்து மற்ற தலைவர்களை பேசுவது எந்த வகையில் நியாயம்..? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும் ஆ ராசா போன்றவர்கள் பேசுவதை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியது – கண்டிக்கத்தக்கது என்றும், நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவோம் என்ற சர்வாதிகார போக்கை திமுக கடைப்பிடிக்கிறதா..? என்றும் அவர் வினவியுள்ளார்.

அரசியலில் என்ன பேசுவது என்ற வரைமுறை அற்ற பிற்போக்குத்தனமான கொள்கைகளை திமுக கடைபிடிக்கிறதா ..? எனறும், எல்லோருமே பதிலுக்கு பதில் பேசினால் தமிழக மக்கள் என்ன நினைப்பார்கள் ..? ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் நாகரிகமற்ற முறையில் பேசுவது மக்களிடையே வெறுப்பை தான் ஏற்படுத்தும். என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆ ராசா போன்றவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் ஆ ராசா போன்றவர்களின் சுய ரூபத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாகவும், இது போன்ற அறிவற்ற வகையில் பேசுவதை தட்டி கேட்கும் வகையிலும் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை சென்னை பெருங் கோட்டத்தில்.. பிரிக்கப்பட்டுள்ள ஏழு மாவட்டங்களில் 7 இடங்களில், தனித்தனியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அராஜக போக்கை தொடர்ந்து திமுக வெளிப்படுத்தினால் பாஜக தொடர் போராட்டத்தை நடத்தும் என்றும நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: amith shahTamil Nadu BJP state president Nainar NagendranChennaibjpbjp protesta raja
ShareTweetSendShare
Previous Post

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – பாஜக போராட்டம்!

Next Post

புதுச்சேரி பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ராமலிங்கம்!

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies