மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!
Jun 13, 2026, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா எனும் மையத்தின் மூலம் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இலவசமாக பல்வேறு உபகரணங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இலவச உபகரணங்களைப் பெறும் முறை குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ஏழ்மையை 14.2 சதவீதத்தில் இருந்து 2.3 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. மக்கள் ஆரோக்கியத்தில் அதீத அக்கறை கொண்டிருக்கும் மத்திய அரசு, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வகையிலான உபகரணங்களை இலவசமாக வழங்கி வருகிறது.

பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா எனும் மையத்தை உருவாக்கி, அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் ADAP எனப்படும் Assistance to Differently Abled people எனும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், செவிதிறன் குறைபாடு உடையவர்கள் மற்றும் சிறப்புத் திறன் கொண்டவர்களுக்கு பிரத்யேக உபகரணங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சக்கர பேட்டரி வாகனங்கள், சக்கர நாற்காலிகள், கை தாங்கி நடப்பான்கள், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன வாக்கிங் ஸ்டிக் என அவரவர் தேவைகளுக்கு ஏற்றாற்போல பயன்பட்டு உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

அதே போல ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ், 60 வயது நிறைந்தவர்களுக்கான கிரிப் பேண்டுகள், இடுப்பு வலி நிவாரணி பேண்டுகள், செவி திறன் குறைபாடு உடையவர்களுக்கான கருவி மற்றும் கை தாங்கி நடப்பான்களும் எவ்வித கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.

கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரூபாய் 8,000 மதிப்புள்ள 20 பொருட்கள் அடங்கிய கிட் உள்ளிட்ட அனைத்துவிதமான உபகரணங்களும் பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா மையத்தின் மூலமாக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவது பயனாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை கே கே நகர் ESI மருத்துவமனையில் செயல்படும் இம்மையத்தைத் தொடர்பு கொண்டு தேவையான சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் 22,500 ரூபாய்க்குக் கீழ் வருமானம் உடையவர்கள் இந்த சேவைகளில் முற்றிலுமாக பயனடையலாம் எனவும்,  ESI மருத்துவமனையை இந்த சேவைகளுக்காக அணுகும் நபர்கள், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பின், அவர்களுக்கான உபகரணங்களைப் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை கால்கள் செயலிழந்து ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் சிலருக்கு, ADAP திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற பேட்டரி சக்கர வாகனத்தால், வெளி உலகைத் தற்சார்பாகப் பார்ப்பதற்கும், சொந்தமாகத் தொழில் செய்வதற்குமான நம்பிக்கையை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது

வருமானத்தில் நலிவடைந்த குடும்பங்களில் வாழும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதோடு அவர்களின் மனதில் புதிய தன்னம்பிக்கையையும் விதைத்திருக்கிறது.

Tags: குழந்தைகள்மாற்றுத்திறனாளிCentral government's amazing scheme: Free equipment for the differently-abledமத்திய அரசின் அசத்தல் திட்டம்பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திராமுதியவர்கள்மாற்றுத் திறனாளிகள்L MuruganTodayNEWS TODAYமத்திய அரசு
ShareTweetSendShare
Previous Post

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு – கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Next Post

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies