மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!
Sep 10, 2026, 06:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Murugesan M by Murugesan M
Jul 24, 2025, 08:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப்பிரதேசத்தில் , வெளிநாடுகளின் பெயரில் போலியாகத் தூதரகம் தொடங்கி மோசடி ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வித்தியாசமான இந்த மோசடி குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்..

போலி மருத்துவமனை, போலி நிதி நிறுவனம், போலி வங்கிகள் குறித்த செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். போலி நீதிமன்றம் பற்றிக் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வெளியானது. ஆனால், தற்போது போலி தூதரகத்தை உருவாக்கி பணமோசடி செய்து அனைவரையும் அதிரச் செய்துள்ளார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர்.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்தர் ஹர்ஸ்வர்தன் ஜெயின். தொடக்கம் முதலே பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்ட அவர், ஒரு புதுமையான முயற்சியாகப் போலி தூதரகம் ஒன்றைத் தொடங்க முடிவெடுத்தார்.

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளின் பெயரில் தூதரகம் தொடங்கினால், தூதரகம் தொடங்கிய அடுத்த நொடியே கம்பி எண்ண வேண்டி வரும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

ஆகவே,  செபோர்கா, பவுல்வியா, லோடோனியா போன்ற அங்கீகரிக்கப்படாத சிறிய நாடுகளின் பெயரில் தூதரகங்களை ஆரம்பித்தார். அதற்காக காஸியாபாத் நகரில் 2 மாடி கட்டடம் ஒன்றையும் வாடகைக்கு எடுத்தார்.

தூதரகம் தொடங்கினால் மட்டும் போதுமா? அதனை மக்கள் நம்ப வேண்டாமா?  எனவே, பிரதமர் மோடி, ஏபிஜே அப்துல் கலாம் போன்றவர்களுடனும், உலக நாட்டுத் தலைவர்களுடனும் சேர்ந்து எடுத்துக் கொண்டது போன்ற புகைப்படங்களைத் தயார் செய்து அலுவலகம் முழுவதும் தொங்கவிட்டார்.

சமூக வலைதளங்களிலும் தனது தூதரகத்திற்கென்று பிரத்யேக கணக்குகளைத் தொடங்கிய அவர், தூதரகத்தின் செயல்பாடுகளை அவ்வப்போது பதிவிட்டு வந்தார். பல்வேறு நாடுகளின் போலி முத்திரைகள், போலி நெம்பர் போர்டுகள், போலி பாஸ்போர்ட்கள் என பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்து முடித்தார் ஹர்ஸ்வர்தன் ஜெயின்.

வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல வேண்டுமா?.. அதுவும் குறைந்த செலவில்?.. சற்றும் தாமதிக்காமல் தனது தூதரகத்தை அணுகலாம் என அறிவித்த அவர், பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று ஏமாற்றினார்.

அதோடு, பார்ட் டைமாக ஹவாலா பண மோசடியிலும் ஈடுபடத் தொடங்கினார். எல்லாம் சரியாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை. இந்த போலி தூதரகம் குறித்த செய்தி காவல்துறையின் காதுக்குச் சென்றுவிட்டது.

உடனடியாக இது குறித்த சோதனை செய்த போலீசார், போலி தூதரகம் நடத்தி வந்த ஹர்ஸ்வர்தன் ஜெயினை கைது செய்தனர். மேலும்,  34 நாட்டு முத்திரைகள், 44 லட்சம் ரூபாய் பணம், 18 தூதரக நம்பர் பிளேட்கள், 4 ஆடம்பர கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், சர்வதேச ஆயுத வியாபாரி அட்னான் கஷோகி மற்றும் ஆன்மீக குரு சந்திரசாமி ஆகியோருடன் ஹர்ஸ்வர்தனுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்வதில் காட்டிய இந்த நுட்பத்தையும், இந்த தனித்துவத்தையும் உருப்படியாக ஒரு தொழில் தொடங்கி, அதில் காட்டியிருந்தால் ஹர்ஸ்வர்தன் ஜெயின் சாதித்திருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: New route in fraud: A thief who started a fake embassy and embezzled moneyபோலி தூதரகம்மோசடியில் புது ரூட்பணம் சுருட்டிய கில்லாடி
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

Next Post

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies