50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு - பயணிகள் நிலை என்ன?
Sep 10, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

Murugesan M by Murugesan M
Jul 24, 2025, 08:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அகமதாபாத் விமான விபத்தில் இருந்தே பலர் மீளாத நிலையில், ரஷ்யா விமானம் விபத்தில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருப்பவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பே இல்லை என்ற தகவல் உறவினர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது.

சுக்குநூறாக சிதறிக் கிடக்கும் விமான பாகங்கள்… கருகிப்போன உடல்கள் என உலகையே மீண்டும் கண்ணீர் கடலில் தள்ளியிருக்கிறது ரஷ்ய விமான விபத்து. அகமதாபாத்தில் நடந்த கோர விமான விபத்தில் இருந்தே உலகம்  மீளாத நிலையில், மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷ்ய-சீன எல்லையில் உள்ள பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரத்திலிருந்து டிண்டா நகரத்திற்குச் சென்ற அங்காரா AN-24 விமானம்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது.  5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள், 6 பணியாளர்கள் என 50 பேருடன் புறப்பட்ட இந்த  விமானம் ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் சென்றபோது ரேடாரில் இருந்து திடீரென மாயமானது.

மீட்பு ஹெலிகாப்டர்கள் உதவியுடன் விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில், டிண்டா நகரில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, அடர்ந்த மலைப்பகுதியில் புகை மூட்டம் எழுவதைக் கண்டது மீட்புக்குழு.

விமானம் எரிந்த நிலையில் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீட்புக்குழு, விமானம் முழுவதும் உருக்குலைந்ததால், பயணிகள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்தது. சம்பவ இடத்திற்குக் கூடுதல் மீட்புக்குழு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விமானத்தை இரண்டாவது முறையாகத் தரையிறக்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சைபீரியாவைச் சேர்ந்த அங்காரா நிறுவனத்தால் இயக்கப்படும் Antonov-24 என்ற பெயர் கொண்ட இந்த விமானம், 50 ஆண்டுகள் பழமையானது. 50 இருக்கைகள், பவர்புல்லான Twin turboprop engine, 420 கிலோ மீட்டர் வேகம் கொண்ட இந்த விமானம் முதன்முதலில் 1959ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.  2021ம் ஆண்டுடன்  விமானத்தின் தகுதிச்சான்றிதழ் முடிந்த நிலையில், 2036ம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகப் பழைய சோவியத் விமானங்களை அப்புறப்படுத்திவரும் ரஷ்யா, நவீன ஜெட் விமானங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. எனினும் பழைய சிறியரக விமானங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதே அடிக்கடி விபத்து நேரிடக் காரணம் என்பது துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

விமானம் விபத்தில் சிக்கிய காரணம் இன்னும் தெரியாத நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டு, உண்மையான காரணத்தைக் கண்டறியும் பணிகள் நடைபெறுகிறது.

Tags: Russian plane missing with 50 people on board: Broken parts recovered - What is the condition of the passengers?அகமதாபாத் விமானதுரஷ்யா விமானம் விபத்துplane accident today
Share
Tweet
SendShare
Previous Post

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Next Post

பிரதமர் மோடி வருகை : கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் தூய்மைப் பணிகள் தொடக்கம்!

Related News

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies