திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் - சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!
Jun 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 15, 2025, 09:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் ஒன்றை  சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்க உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர்! நிறைவேற்றப்படாத திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முன்னிறுத்தி “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” என்ற கேள்வித் தொடரை எனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கவிருக்கிறேன். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என மார்தட்டும் ஸ்டாலின்  மறந்து போன முக்கியமான 100 தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 12 நாட்களாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறி அமைதியான வழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களின் மீது இரவோடு இரவாக அடக்குமுறையை ஏவியுள்ள திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நீங்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொடுத்த வாக்குறுதியைத் தானே நிறைவேற்றக் கேட்கிறோம் என்ற கேள்விக்கு, அமைச்சர் சேகர்பாவு அப்படி ஒரு வாக்குறுதியைத் திமுக கொடுக்கவேயில்லை என நாகூசாமல் பதிலளித்திருக்கிறார்.

ஆகவே, இத்தொடரின் பிள்ளையார் சுழியாக, நம் நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைத்த அந்த மக்களின் வாக்குகளைப் பெற்றிட அளிக்கப்பட்ட, இன்று வரை நிரைவேற்றப்படாத ஒரு வாக்குறுதியை முன்வைத்து தொடங்குவோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதோ திமுக-வின் தேர்தல் அறிக்கையிலுள்ள வாக்குறுதி எண். 285! இதை அதிக அளவில் மக்களிடையே எடுத்துரைக்க பாஜகதொண்டர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! விரைவில் மற்றொரு காற்றில் பறந்த வாக்குறுதியோடு உங்களை சந்திக்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

Tags: DMKTamil Nadu BJP state president Nayinar Nagendran“சொன்னீங்களேசெஞ்சீங்களா?DMK’s lies.
ShareTweetSendShare
Previous Post

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

Next Post

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies