தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!
Aug 7, 2026, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரத் தமிழக அரசு மறுப்பதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவையின் இன்றைய நிகழ்வில், தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் எண்ணிக்கை என்ன? இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், புதிய வீடுகள் கட்டுவதற்குத் தேவையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் வினா எழுப்பப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிரதமர் மோடியைத் தமிழக மக்கள் பாராட்டி விடுவார்கள் என்பதற்காகவே ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதைத் தமிழக அரசு மறுப்பதாகக் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் உள்ள ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பது பிரதமர்  மோடியின் குறிக்கோள் எனக்கூறிய அவர், தமிழக மக்களுக்கு மாநில அரசு அநீதி இழைப்பதாகத் தெரிவித்தார்.

வீடுகளைக் கட்டித் தரவும், அதற்குத் தேவையான நிதியை வழங்கவும் மத்திய அரசு தயாராக இருந்தும் அதனைத் தமிழக அரசு ஏற்கவில்லை எனவும் கூறினார்.

எனவே, தமிழக அரசைக் கைகூப்பிக் கேட்பதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்,

தமிழகத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டி தருவதற்கான அனுமதியை அரசு வழங்குவதோடு அதற்கான ஆய்வை நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Tags: தமிழக அரசுUnion Minister Shivraj Singh Chouhan accuses Tamil Nadu governmentஅமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
Share
Tweet
SendShare
Previous Post

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

Next Post

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies