அனைவருக்கும் ஐஐடி திட்டம் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நனவாகிய கனவு!
Apr 29, 2026, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனைவருக்கும் ஐஐடி திட்டம் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நனவாகிய கனவு!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 381 மாணவர்கள் ஐஐடியில் இணைந்து தங்களின் கல்வியைத் தொடங்கியுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த ஐஐடி, அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் மூலம் உள்ளங்கைக்கே வந்திருப்பது குறித்து இந்தச் சிறப்புத் தொகுப்பில் பார்க்கலாம்.

அனைவருக்கும் ஐஐடி எனும் திட்டத்தைக் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கிய சென்னை ஐஐடி, டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இரண்டு இணையவழி படிப்புகளையும் அறிமுகம் செய்துள்ளது.

நுழைவுத் தேர்வில் வெற்றிப் பெறுவோருக்கு இப்பாடப்பிரிவுகளைப் பயில வாய்ப்பு கிடைக்கும் நிலையில், இந்த அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் மூலமாக மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் 381 அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் இணையவழிக் கல்வியில் இணைந்துள்ளனர்.

ஐஐடியின் இணைய வழிக் கல்வியில் மாணவர்களை சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அதற்கெனப் போதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து வருகிறது.

ஆர்வத்துடன் பயிலும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தேர்வுக் கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்தி வருகிறது. நுழைவுத் தேர்வில் வெற்றிப் பெறும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டுவருமானம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் 75 சதவிகிதத்தை ஐஐடியே செலுத்துகிறது.

தேர்வாகும் மாணவர்கள் எஸ்.சி மற்றும் எஸ் டி பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கான மீதமுள்ள 25 சதவிகிதக் கட்டணத்தையும் தமிழக ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் செலுத்துகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களும் ஐஐடியில் இணைந்து பயில வேண்டும் என்பதற்காகத் தமிழக அரசின் தாட்கோ மூலமாக மட்டும் சுமார் 300க்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தாட்கோவின் முயற்சியால் தற்போது 23 மாணவர்கள் ஐஐடியில் இணைந்திருக்கும் நிலையில் வரும் காலங்களில் மேலும் பலரை இணைய வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பன்னிரெண்டாம் வகுப்பு வரைச் சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பயின்ற தனக்கு ஐஐடியில் இணைய வழிக் கல்வியில் பயில வாய்ப்பு கிடைத்ததன் மூலம் தன் கனவு நிறைவேறியிருப்பதாக மாணவர்கள் கருதுகின்றனர்.

ஏழை, எளிய பின்னணியை கொண்ட மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த ஐஐடி தற்போது அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் மூலம் உள்ளங்கைக்கு வந்திருக்கிறது. ஐ.ஐடி நிர்வாகத்தின் இந்த முயற்சி அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்ந்த இலக்கை அடைய உறுதுணையாக அமைந்திருக்கிறது.

ஐஐடியில் இணையவழியில் நடைபெறும் இக்கல்வி முறையில் 17 வயது முதல் 81 வயது வரை உள்ளவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயிலலாம் என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகளில் தமிழக அரசுப் பள்ளிகளில் இருந்து மட்டும் 381 மாணவர்கள் ஐஐடியில் இணைந்திருக்கும் நிலையில், மேலும் பல மாணவர்களை இத்திட்டத்தின் கீழ் இணைக்க தமிழகப் பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: IIT for All Scheme: A dream come true for government school studentsஅனைவருக்கும் ஐஐடி திட்டம்
ShareTweetSendShare
Previous Post

விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Next Post

அம்பலமான மாநகராட்சியின் பொய் : பறிபோன பெண்ணின் உயிர் – நிர்கதியான குடும்பம்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies