வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமல்!
Sep 12, 2026, 10:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமல்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 01:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எத்தனை  சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து, நீதிமன்ற உத்தரவின்படி சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அரசு போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கைகளை அந்நிறுவனங்கள் தாக்கல் செய்தன.

இதனையடுத்து ஐஐடி – ஐஐஎம் குழுவினருக்குத் தேவையான தகவல்களை வழங்க ஏதுவாகத் தலைமைச் செயலாளர்த் தலைமையில் விரைவில் கூட்டம் கூட்ட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளதால், வால்பாறையில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், வால்பாறைச் செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், வால்பாறைச் செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்தும் சோதனை நடத்த உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.

Tags: e-passஇ-பாஸ்வால்பாறைE-pass system to be implemented in Valparai from November 1st!
Share
Tweet
SendShare
Previous Post

வேலுார் வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கிலும் தொடர்பு – அபுபக்கர் சித்திக் மீண்டும் கைது!

Next Post

ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடர அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies