ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடர அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்!
Aug 6, 2026, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடர அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 01:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூய்மை  பணியாளர்கள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், அதை விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் விசாரணையை  தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் காவல்துறையால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை விடுவிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ் ரமேஷ் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆணையமாக ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து உத்தரவிட்டது.

தொடர்ந்து இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறை  சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு தலைமையிலான அமர்வு ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்த வழங்கிய உத்தரவை நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒரு நபர் ஆணையம் குறித்த எந்தவொரு கோரிக்கையும் வைக்கப்படாத நிலையில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் இருதரப்பிடமும் விசாரணை நடத்தும் வகையிலேயே ஒரு நபர் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்துவதை எண்ணி அரசு தரப்பு ஏன் அச்சப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்போது காவல்துறை  தரப்பில், நீதிமன்றம் ஒரு நபர் ஆணைய உத்தரவை உறுதி செய்வதாக இருந்தால் வேறு ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, ஒரு நபர் ஆணையம் தொடர்ந்து விசாரணை  தொடர அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்One-person commission allowed to continue investigation - Madras High Court
Share
Tweet
SendShare
Previous Post

வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமல்!

Next Post

தமிழகத்தில் உள்ள 4 அரசு மருந்தியல் கல்லுாரிகளில் 2 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies